பறக்க வேண்டும் நான்
பாரின் அழகாய் கண்களால்
அள்ளி பருகிட
பறக்க வேண்டும் நான்
பச்சை பசேலென விரிந்த
பூமியை பார்க்க
பறக்க வேண்டும் நான்
மின்னில் மின்னும் நட்சத்திரத்தை
எட்டிப் பிடிக்க
பறக்க வேண்டும் நான்
இரும்பை தெரியும் மானிடர்களை
உயரத்தில் இருந்து பார்க்க
பறக்க வேண்டும் நான்
பறக்கும் கனவு இறக்கை
இல்லையேல் விமானத்திலாவது
பறக்க வேண்டும் நான்

0 comments:
Post a Comment