Friday, December 4, 2015

முஸ்லிம் பெண் கொண்ட காதல்

Friday, December 04, 2015 Posted by Admin No comments

அருகில் சில வருடங்களுக்கு முன்பாக ஒரு கிருஸ்தவ நாட்டில் ஒரு முஸ்லிம் குடும்பம் வாழ்ந்து வந்தது. அக்குடும்பத்து குமரிப்பெண் ஒருத்தி அந்நாட்டு கிருஸ்த்தவ ஆணை விரும்பி வந்தால். இருவரும் விரும்பி திருமணம் செய்துகொள்ளும் தருணம் வரை வந்துவிட்டது.

அம் முஸ்லிம் பெண் தனது தந்தையிடம் இது பற்றி “தான் ஒரு கிருஸ்த்தவ ஆணை விரும்புவதாகவும் அவனை மனமுடிக்க ஆசைப்படுவதாகவும்” கூறி தந்தையிடம் அனுமதி கேட்டால். தந்தை அனுமதி அளிக்க மறுத்தார். இவ்வாறு தந்தை மறுக்க மீண்டும் மீண்டும் கேட்க தந்தை கண்டித்து என் விருப்பத்திற்கு எதிராக எதாவது செய்து கொண்டால் என் முகத்தில் கூட முழிக்க குடாது என்று மறுத்து விட்டார்.
இறுதியாக அப் பெண் தனது காதலன் இஸ்லாம் மதத்தை ஏற்று கொண்டால் அனுமதி தருவீரா என கேட்க. அதற்கு தந்தை ஒப்புக்கொண்டார்.

பின் அப்பெண் தனது கைவசமுள்ள சில இஸ்லாமிய புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரான் பிரதிகளையும் தனது காதலனிடம் வழங்கினார். கிருத்தவ பையன் தனது கைவசமுள்ள சில கிருத்தவபுத்தகங்களை அப்பென்னிடம் வழங்கினான். இதை படித்து பின் உமக்கு விருப்பம் என்றால் இஸ்லாம் மதத்தை தழுவி தன்னை மனம் முடிக்குமாறு கேட்டுக்கொண்டால். இதற்கு அந்த கிருஸ்த்தவ ஆண் ஒப்புக்கொண்டு கால அவகாசம் கேட்டான். சில நாட்கள் கடந்தன. பின் தந்தை தனது மகளிடம் கிருஸ்த்தவ பையனை பற்றி விசாரித்தார். பின் அப்பெண் தனது காதலனை சந்திக்க சென்றாள். 


என்ன ஆச்சரியம் தனது காதலன் இஸ்லாமிய தோற்றத்தில் காணப்பட்டான். அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடினர். இதன் பொது அந்த ஆண் அப்பெண்ணை சந்தித்தது மிகப்பெரிய அதிஷ்டம் என்றும்
பாராட்டினான். பின் திருமணத்தை பற்றி அப்பெண் அந்த காதலனிடம் வினவிய போது. அந்த ஆண் தனது கைவசமிருந்த அந்த பெண் வழங்கிய புத்தகங்களை அந்த பெண்ணிடம் கொடுத்து விட்டு திருமணம் முடிக்க நான் தயாராக இல்லை என மறுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு ஆச்சரியம். என்ன காரணம் என்று வினவிய சந்தர்ப்பத்தில். அந்த ஆண் சொன்னான் “நான் எல்லா இஸ்லாமிய புத்தகத்தில் உள்ள எல்லா விடயங்களையும் படித்து விட்டதாகவும். தான் அதிலுள்ளது போல் இஸ்லாமிய மதத்தை எடுத்து நடப்பதற்கு முன் வந்து விட்டதாகவும்” கூரி. இதுதான் தான் மருத்ததட்கு காரணம் என்றும் கூறினான். அந்த பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை.

விபரமாகக் கேட்டால். அதற்கு அந்த ஆண் தான் ஒரு சாலிஹான பெண்ணை மன முடிப்பதற்கு ஆசைப்படுவதாகவும் அந்த தகுதியை நீ அடையவில்லை எனவும் கூரி கையிலுள்ள புத்தகங்களை படித்து ஒரு சாலிஹான இஸ்லாமிய பெண்ணாக மாறிவிட்டு தன்னிடம் சம்மதம் பெற வருமாறும் கோரி மேலும் அடிக்கடி தன்னை சந்திக்க அழைக்க வேண்டாம் என்றும் கோரி அனுப்பிவைத்துவிட்டான்.
முற்றும்

இதுதான் சகோதரிகளே இன்று இஸ்லாமிய பெண்களின் நிலைமை. இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்கலாக வாழ்ந்தால் அந்நிய ஆணை காதலிக்க கூடிய மன நிலை அந்த பெண்ணிற்கு ஏற்பட்டிருக்காது. அல்லாஹ் நீதியானவன் ஒவ்வரு மனிதனிட்கும் திருந்தும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவான். அது இஸ்லாமியர்களுக்கும் தான் அந்நியர்களுக்கும் தான். அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் இரு உலகிலும் வெற்றி தான். அந்த சந்தர்ப்பம் தான் அந்த ஆணிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
எங்களது பாவங்களையும் மன்னித்து எங்களுக்கும் திருந்தி வாழக்கூடிய சந்தர்ப்பத்தை அளித்து ஈர் உலகத்திலும் சந்தோசமான நிம்மதியான வாழ்கையை அளிப்பானாக. ஆமீன் ஆமீன்

இதனை மற்ற சகோதரர்களுக்கும் பகிர்ந்து மற்றவர்களுக்கும் திருந்தக்கூடிய சந்தர்ப்பமாக இது கூட அமையலாம்.!!


ஜசாக்கல்லாஹு ஹைய்ரா

0 comments:

Post a Comment